Paristamil Navigation Paristamil advert login

கோடை காலத்தில் காரை பராமரிப்பது எப்படி...? 

கோடை காலத்தில் காரை பராமரிப்பது எப்படி...? 

19 சித்திரை 2024 வெள்ளி 05:54 | பார்வைகள் : 370


கொளுத்தும் வெயிலில் நம்முடைய காரை எப்படி பாதுகாப்பது என்பது குறித்த சில விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

கோடைக்காலம் தொடங்கிய நிலையில் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களை எப்படி பாதுகாக்கலாம் என்று நினைத்து கொண்டிருப்பார்கள். அதிலும், நாம் கார்களை பராமரிப்பது அவசியமாகும்.

* கோடை காலத்தில் சூரிய ஒளியானது வழக்கத்தை விட அதிகமாக இருப்பதால் பெயிண்ட் மங்கலாவதற்கும், உரிவதற்கும் வாய்ப்புள்ளது. இதனால், அடிக்கடி காரை கழுவுவதோடு வண்ணங்கள் போகாமல் இருக்க வேக்ஸ் பயன்படுத்த வேண்டும். மேலும், முடிந்தவரை நீழலில் பார்க் செய்யுங்கள் அல்லது கார் கவர் வாங்கி கொள்ளுங்கள்.

* கோடைகாலத்தில் உங்களது எஞ்சின் சிஸ்டம் நல்ல முறையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அடிக்கடி கூலண்ட் அளவை பரிசோதியுங்கள்.

* உங்களது கார் Engine பழுதடையாமல் இருக்க கூலிங் சிஸ்டத்தில் கசிவுகள் இருந்தால் சரி செய்யுங்கள். radiator -ல் ஏதாவது அடைப்பு இருந்தால் மெக்கானிக்கிடம் சென்று சரிபடுத்துங்கள்.

* காரின் உட்புறத்தில் அதிக வெப்பம் ஆகாமல் இருக்க Windshield அல்லது கார் விண்டோவில் Sun shade -களை பயன்படுத்துங்கள். இது கீறல் ஏற்படுவதை தடுக்கும்.

* கோடை காலத்தில் Leather இருக்கைகள் பாதிப்படையாமல் இருக்கவும், மிருதுவாக இருக்கவும் Leather conditioner உபயோகியுங்கள்.

* கோடைகாலத்தில் காரின் டயர்கள் பாதிப்படையும். இதனால் டயர் லேசாக கிழிந்திருந்தாலும் உடனே மாற்றி விடுங்கள்.  

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்